செப்.30-இல் பாஸ்போர்ட் அதாலத்

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 30-ம் தேதி அதாலத் (குறைதீர்) கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 30-ம் தேதி அதாலத் (குறைதீர்) கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மண்டலத்துக்குள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கான பாஸ்போர்ட் அதாலத் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பாஸ்போர்ட் கேட்டு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விண்ணப்பத்து, சில காரணங்களால் பாஸ்போர்ட் பெற முடியாதவர்களின் விண்ணப்பங்கள் மீது தீர்வு காணும் வகையில், இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது பாஸ்போர்ட் விண்ணப்பம் எண், விண்ணப்பித்த தேதி, பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, தற்போதைய முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் பாஸ்போர்ட் பெற முடியாததற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய விவரங்களுடன் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.விவரங்களை அனுப்பும்போது, உறையின் மீது "பாஸ்போர்ட் அதாலத்' என குறிப்பிட்டு பாஸ்போர்ட் அதிகாரி, பாஸ்போர்ட் அலுவலகம், முதல் தளம், மாநகராட்சி வணிக வளாகம், அவிநாசி சாலை, கோவை-18 என்ற முகவரிக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com