கோவை மேயர் தேர்தலில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 73.88 சதவீத வாக்குகளை அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் பெற்றுள்ளார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வடக்கு மண்டலத் தலைவராக இருந்த ப.ராஜ்குமார் அப் பதவியில் இருந்து விலகி, மேயர் வேட்பாளராக அதிமுகவால் அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் தலைவர்களாக அதிமுகவினரே பதவி வகிக்கின்றனர். இந் நிலையில், மேயர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.தெற்கு மண்டலத்தில் பதிவான வாக்குகள் 1,32,247-இல் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் 97,698 வாக்குகளை பெற்றுள்ளார். இது 73.88 சதவீதம். பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார் பெற்ற வாக்குகள் 24,152. சதவீதம் 18.26.
மத்திய மண்டலத்தில் பதிவான வாக்குகள் 1,22,954. அதிமுகவின் ராஜ்குமார் பெற்ற வாக்குகள் 87,957. சதவீதம் 71.54. பாஜகவின் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 24,610. சதவீதம் 20.02.
மேற்கு மண்டலத்தில் மொத்த வாக்குகள் 1,14,341. அதிமுகவின் ராஜ்குமார் பெற்ற வாக்குகள் 80,186. சதவீதம் 70.13. பாஜகவின் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 26,660. சதவீதம் 23.32.
கிழக்கு மண்டலத்தில் மொத்த வாக்குகள் 1,22,494. அதிமுகவின் ராஜ்குமார் பெற்ற வாக்குகள் 82,003. சதவீதம் 66.94. பாஜகவின் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 27,259. சதவீதம் 22.25.
வடக்கு மண்டலத்தில் மொத்த வாக்குகள் 1,08,115. அதிமுகவின் ராஜ்குமார் பெற்ற வாக்குகள் 72047. சதவீதம் 66.64. பாஜகவின் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 26,017. சதவீதம் 24.06.