பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் கோமங்கலம் ஊராட்சியில் 6வது வார்டில் மொத்தம் பதிவான 201 வாக்குகளில் ராஜசேகரன் 119 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட ராஜசேகரைவிட 41 வாக்குகள் அதிகம் பிடித்து வெற்றி பெற்றார்.

ஆனைமலை ஒன்றியம் பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் 6வது வார்டில் பாலுசாமி மொத்தம் பதிவான 134 வாக்குகளில் 54 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முருகேசன் 42 வாக்குகளும், ஈஸ்வரன் 35 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.

பெத்தநாயக்கனூர் ஊராட்சியில் 7 வது வார்டில் மொத்தம் பதிவான 196 வாக்குகளில் மனோகரன் 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவக்குமார் 41 வாக்குகள் மட்டுமே பெற்றார். பெத்தநாயக்கனூர் 9வது வார்டில் மொத்தம் பதிவான 185 வாக்குகளில் பெரியசாமி 127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுரேஷ் 55 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி 2வது வார்டில் மொத்தம் பதிவான 144 வாக்குகளில் பாலமுருகன் 93 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாச்சிமுத்து 48 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

கோட்டூர் பேரூராட்சியில் 16வது வார்டில் மொத்தம் பதிவான 1,579 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முத்துசாமி 863 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்ட கவிநிலவு 681 வாக்குகளும், மணிகண்டன் 35 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.

கிணத்துக்கடவு 12வது யூனியன் கவுன்சிலர் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான 3,833 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் கலாமணி 2,752 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரகாஷ் 564 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சுரேஷ் 459 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.

கிணத்துக்கடவு ஒன்றியம் சூலக்கல் ஊராட்சியில் 3வது வார்டில் மொத்தம் பதிவான 166 வாக்குகளில் வஞ்சீஸ்வரி 85 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்ட யுவராணி 34 வாக்குகளும், ஜெயசுதா 37 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தார். தேவனாம்பாளையம் ஊராட்சியில் 8வது வார்டில் மொத்தம் பதிவான 204 வாக்குகளில் அய்யப்பன் 134 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் பிரதாப் 64 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com