மே 6 இல் தேனீ வளர்ப்பு பயிற்சி
By dn | Published On : 30th April 2014 12:37 AM | Last Updated : 30th April 2014 12:37 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் மே 6 ஆம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல்,
தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு நேரில் வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரூ.250 கட்டணத்தை நேரடியாகச் செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் இறுதியின் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003. 0422-6611214.