சுடச்சுட

    

    தமிழக அரசின் குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், அன்னூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட மையங்களை சேர்ந்த 65 கர்ப்பிணிகளுக்கு கே.ஜி. நூற்றாண்டு மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அன்னூர் ஒன்றியத் தலைவர் கண்ணம்மாள் தலைமை வகித்தார். அன்னூர் பேரூராட்சித் தலைவர் ராணி சௌந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். அன்னூர் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நிர்மலா வரவேற்றார்.

    சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை அவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அமுல் கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் செல்வராஜ், பழனிசாமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் வளர்மதி, லீலாவதி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai