சுடச்சுட

  

  இ-மெயில் ரகசிய எண்ணை மாற்றி தகவல் திருடியதாகப் புகார்

  By கோவை,  |   Published on : 01st June 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் வங்கி சேவை ஆலோசகரின் இ-மெயில் ரகசிய எண்ணை மாற்றி தகவல்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சோமந்துறை சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டி.தனகோபால் (31). இவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது:

  எனது இ-மெயில் முகவரி மற்றும் ரகசிய எண்ணைத் தெரிந்து கொண்ட சிலர், நான் வழக்கமாக பயன்படுத்தும் ரகசிய எண்ணை மாற்றி, புதிய ரகசிய எண்ணைப் பதிவு செய்து, கடந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதிமுதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை எனக்கு வந்த இ-மெயில்களைப் பார்த்து தகவல்களைத் திருடியுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

  இது குறித்து விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார், இருவேறு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியது:

  வங்கிகளில் கடன் பெறுவோருக்கு ஆலோசனை வழங்குதல், கடன் பெற்றுத் தருதல் ஆகிய பணிகளை தனகோபால் செய்து வருகிறார்.

  அவரது இ-மெயில் ரகசிய எண் மாற்றப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டது குறித்து "கூகுள்', "யாகூ' நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைகளைத் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டுள்ளார். இருப்பினும் அவரது கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. பிரச்னைக்கு முடிவும் தெரியவில்லை. இதனால் புகார் அளித்துள்ளார் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai