Enable Javscript for better performance
குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு பயிற்சி முகாம்

    By அன்னூர்,  |   Published on : 01st June 2014 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சமூக நலத்துறை இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின .

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ. சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பயிலக ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ஐ.ஏ.எஸ்.சி. நிதிக்குழுமத்தின் மேலாளர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார்.

    சமுதாயத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிராக உள்ள இடர்ப்பாடுகளை சமாளிப்பது குறித்து, நன்னடத்தை அலுவலர் இரா.செந்தில்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாமில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    குழந்தைகளை கடத்தி அடிமை தொழிலாளர்களாக விற்பது, பிச்சையெடுக்கும் தொழிலுக்காக விற்பது, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முகாமில் வலியுறுத்தப்பட்டது.

    முகாமுக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai