சுடச்சுட

    

    மறைந்த கே.பாலதண்டாயுதத்தின் 41-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கே.பாலதண்டாயுதம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.

    கோவை சிங்காநல்லூர் கமிட்டிக்கு உள்பட்ட பாலன் நகரில், அவரது நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை டாக்டர் மயில்சாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 20 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் 50 பேர் ரத்த தான இயக்கத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.எஸ்.சுந்தரம், வட்டார செயலாளர் எஸ். சண்முகம், துணைச் செயலாளர்கள் என்.வெள்ளியங்கிரி, யு.கே.சுப்பரமணியம், ஜி.நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai