சுடச்சுட

    

    கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், செல்போன் மூலம் புகைப் பழக்கத்தை ஒழிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து மையத்தின் இயக்குநர் டாக்டர் குகன் கூறியதாவது: உலகம் முழுவதும் மே 31-ஆம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புகை பிடிப்பதாலும், புகையிலையை உயோகப்படுத்துவதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து நன்கு தெரிந்திருந்தும் பலர் புகையிலைப் பழக்கத்தை கைவிட முடியாமல் உள்ளனர்.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 13 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்கள் பலர் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, குறிப்பிட்ட வயதினர் அதிகம் பயன்படுத்தும் ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ். என அழைக்கப்படும் ஆப்பிள் ஐ போன் மூலம் புகைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புகைப் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் தங்களது ஆன்டிராய்டு போனில் உள்ள கூகிள் ப்ளே ஸ்டோர் அப்ளிகேஷனையும், ஐ போன் மூலம் ள்ம்ர்ந்ண்ய்ஞ் ஸ்ரீங்ள்ள்ஹற்ண்ர்ய் என்ற அப்ளிகேஷனையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதில் 12 விதமான கேள்விகள் கேட்கப்படும். ஒரு நாளில் பிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அதனால் உடல் நலத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்து கணக்கிட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    மேலும் புகைப் பழக்கத்தில் இருந்து வெளிவர இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் தடுப்பு மையங்கள் குறித்த விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

    பொதுவாக, குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், அவர்களை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக தங்களது செல்போனில் "நதஐஞத' என்று டைப் செய்து இடம்விட்டு யாருடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமோ அவர்களது எண்ணை பதிவு செய்து 9200003232 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

    இதன் மூலம் புகைப் பழக்கம் உள்ளவரின் செல்போன் எண்ணுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்தி 365 நாளும் அனுப்பப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai