Enable Javscript for better performance
பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் வெள்ளிக்கிழமை இரவு இருவேறு பகுதிகளில் பெண்களிடம் 10 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீஸார் கூறியது: கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரமதி (56). இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது மகள், மருமகன் உள்ளிட்டோருடன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றார். பின்னர் இரவில், சந்திரமதி தனது மருமகன் சந்திரசேகரின் பைக்கின் பின்னால் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிரியன் சர்ச் சாலையில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், சந்திரமதி அணிந்திருந்த 8.5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

    மற்றொரு பெண்ணிடம்... ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (57). அதே பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ராஜலட்சுமி அணிந்திருந்த 1.5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

    இந்த இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் ஆய்வாளர் திருமேனி தலைமையிலான ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai