சுடச்சுட

    

    கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் மே இறுதி வரை மதுவிலக்கு முறைகேடுகள் தொடர்பாக 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கூறியது: கோவையில் மது பதுக்கி விற்பனை செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் மே வரை மொத்தம் 811 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ் வழக்குகள் தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 761 பேர் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். 5,128 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai