சுடச்சுட

    

    கோவை மாவட்டத்துக்கு முதல்வர் வழங்கிய திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலர்களுடன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இக்கூட்டம் நடந்தது.

    திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும், சிறப்புத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதல்வர் அறிவித்த விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்குதல், விலையில்லா வீட்டுமனை வழங்குதல், முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்குதல், விரைவுப் பட்டா வழங்குதல், புதிய குடும்ப அட்டை வழங்குதல் என பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

    முதல்வர் அறிவித்த காந்திபுரம் மேம்பாலப் பணிகள், பொள்ளாச்சி புறவழிச் சாலைப் பணிகள், மேட்டுப்பாளையம் புறவழிச்சாலைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். மேலும் முதல்வரின் சிறப்புத் திட்டங்களை விரைவில் வழங்கிட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும்.

    இத்தகைய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்கள்

    அனைவருக்கும் உரிய நேரத்தில் சென்றடைய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

    மாநகராட்சி ஆணையர் க.லதா, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மக்களவை உறுப்பினர் கே.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள்

    ஆர்.சின்னசாமி, ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை, எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, அ.அ.கருப்புசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், பொள்ளாச்சி சார் ஆட்சியர்

    ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், மாநகராட்சி மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி மற்றும் உள்ளாட்சி

    அமைப்பு பிரதிநிதிகள், அரசுத் துறை

    அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai