சுடச்சுட

  

  சீஷா தொண்டு நிறுவனத்தின் சார்பில் 20 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

  நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட 15 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய கல்வி உபகரணங்களைக் கொண்ட பைகளை சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் வழங்கினார்.

  காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இம்மானுவேல் கலையரங்கில் இதற்கான விழா நடைபெற்றது. சீஷா முதன்மை இயக்குநர் டாக்டர் ஜெயக்குமார் டேனியல் வரவேற்றார்.

  மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களும்,

  தையல் பயிற்சி முடித்த 10 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  சீஷா இலவச தனிப்பயிற்சி மையத்தில் படித்து

  10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai