Enable Javscript for better performance
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வால்பாறை வருகை ரத்து- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையில் கோடைவிழா நிறைவுநிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வருகை திடீரென ரத்தானதால், அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
     ÷வால்பாறை கோடைவிழாவின் நிறைவுநிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நலத்திட்ட உதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
     ÷அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக வால்பாறைக்கு அவர் வர இருந்ததால் வால்பாறை அதிமுகவினர் வால்பாறை நகரப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.
     ÷ஆனால், மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜி.மோகன்குமாரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த அமைச்சர் சென்றதால், அவரது வால்பாறை வருகை ரத்து செய்யப்பட்டது. இதனால் அமைச்சரைக் காண ஆவலுடன் காத்திருந்த அதிமுகவினர் ஏமாற்றமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai