Enable Javscript for better performance
இரு குழந்தைகளுடன்  பெண் கொடூரமாகக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் ஒருவர் அவரது இரு குழந்தைகளுடன் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     ÷கோவை, கணபதி அருகிலுள்ள ராமகிருஷ்ணா நகர், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
     ÷இவரது மனைவி வத்சலாதேவி (28). இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது குழந்தைகள் மகிழன் (6), 11 மாத சிசுவான பிரனீத் ஆகியோர். இவர்களுடன் மருதமாணிக்கத்தின் தாயார் கோவிந்தம்மாள் (54) வசித்து வருகிறார்.÷ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமாணிக்கம் வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. கோவிந்தம்மாள் உடையாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வத்சலாதேவியும் குழந்தைகளும் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
     ÷ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் கோவிந்தம்மாள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வத்சலாதேவி வீட்டுக் குளியலறையில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், குழந்தை முகிலன் படுக்கையறை கட்டிலில் கத்தியால் வயிறு கிழிக்கப்பட்ட நிலையிலும், குழந்தை பிரனீத் தொட்டிலில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையிலும் கிடந்துள்ளனர்.
     ÷அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், துணை ஆணையர் பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
     ÷மோப்ப நாய் ராஜா வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் மோப்ப நாய் அந்த வீட்டிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை சென்றுவிட்டு மீóண்டும் வீட்டுக்கே வந்தது.
     ÷நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, மூவரது உடல்களும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனிப்படை அமைத்து விசாரிக்கப்படுகிறது.
     ÷வத்சலாதேவியின் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் மாயமாகியுள்ளது. காது, கைகளில் அணிந்திருந்த நகைகள் அப்படியே உள்ளன. இதனால் நகைக்காக இக்கொலைகள் நடைபெறவில்லை என்று போலீஸார் கருதுகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
     ÷இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை; சில தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai