சுடச்சுட

    

    துடியலூர் அருகிலுள்ள கணுவாயில் அதிமுக மூன்றாண்டு சாதனை விளக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
     ÷பெ.நா.பாளையம் ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவனூர் கே.துரைசாமி தலைமை வகித்தார். சோமையம்பாளையம் ஊராட்சித் தலைவர் பி.ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
     ÷டியூகாஸ் துணைத் தலைவர் ஆர்.செல்வராஜ், பன்னிமடை ஊராட்சித் தலைவர் சரவணகுமார், கே.எஸ்.கலாமணி, கணுவாய் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை எம்.பி. ஏபி.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, தலைமைக்கழக பேச்சாளர் சிங்கை அம்புஜம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
     ÷இக்கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் கே.வி.என்.ஜெயராமன், விவசாய அணி செயலாளர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திப்பனூர் தேவராஜ் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai