சுடச்சுட

    

    கதிர்நாயக்கன்பாளையத்தில்  சிலிண்டர் வெடித்து விபத்து

    By  பெ.நா.பாளையம்,  |   Published on : 02nd June 2014 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இத்தீவிபத்துக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
     ÷இதுகுறித்து போலீஸார் கூறியது:
     ÷இங்குள்ள நேருநகர், அரிஜன காலனியைச் சேர்ந்தர் பார்வதி. கணவனை இழந்த இவர் தனது மகள் பிரேமா, மருமகன் சிவராஜ் ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் அழகர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சிவராஜும் அழகரும் இணைத்து காஸ்டிங் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
     ÷இத்தொழியில் நஷ்டம் ஏற்பட்டதால், இருவரிடையே பணம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக கடந்த 26-ஆம் தேதி, அழகரின் மனைவி ரேணுகா, சிவராஜின் மனைவி பிரேமாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது பார்வதியின் வீட்டைக் கொளுத்தி விடுவதாக மிரட்டி பிரேமாவைத் தாக்கினாராம்.
     ÷இதனால் காயமடைந்த பிரேமா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரேமா துடியலூர் காவல் ஆய்வாளர் நெல்சனிடம் புகார் கொடுத்தனர்.
     ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பார்வதியின் வீடு தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் பலத்த வெடிச் சத்தம் கேட்டது. வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாயின. மேலும், அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான பனியன் கம்பெனியின் ஜன்னல் கண்ணாடிகளும் வெடித்துச் சிதறின.
     ÷கோவை வடக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். துடியலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், இரு தரப்பினரிடையே நிலவிவந்த முன்விரோதம் காரணமாக தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. ÷
     ÷ஆனாலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் புகாரைப் பெற மறுத்து வருவதுடன், உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai