சுடச்சுட

    

    கார் பந்தயம்: தமிழகத்தின் விஷ்ணு பிரசாத் முதலிடம்

    By  கோவை,  |   Published on : 02nd June 2014 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் பந்தயத்தில் ஒரு பிரிவில் தமிழகத்தின் விஷ்ணு பிரசாத் முதலிடம் பெற்றார்.
     ÷கோவை, செட்டிபாளையம், கரி மோட்டார் ஸ்பீடுவேயில் ஜேகே டயர் நிறுவனம் சார்பில் சனிக்கிழமை துவங்கிய கார் பந்தயம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
     எல்ஜிபி ஃபார்முலா 4 கார் பந்தயம் முதலில் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகள் கொண்ட இப்பந்தயத்தில் கேரள வீரர் டி.எஸ். தில்ஜித், 18.31.420 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.
     ÷கர்நாடகத்தின் சுதர்சன்ராவ் கர்வால், 18.38.168 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், மகாராஷ்டிர வீரர் அமேயா பாப்னா, 18.48.760 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
     இரண்டாவது பந்தயத்தில் மொத்தம் 11 பேர் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தார். இவர் 15 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து, 16.37.588 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.
     ÷இரண்டாமிடத்தை அகில் ரபீந்திரா 16.40.587 நிமிடங்களில் கடந்து பெற்றார். மூன்றாமிடத்தை 16.42.605 நிமிடங்களில் கடந்த கிருஷ்ணராஜ் மகதிக் பெற்றார்.
     மூன்றாவது பந்தயத்தில் கேரளத்தின் டி.எஸ். தில்ஜித் முதலிடத்தையும், கர்நாடகத்தின் சுதர்சன்ராவ் கர்வால் இரண்டாமிடத்தையும், தமிழகத்தின் விஷ்ணு பிரசாத் மூன்றாமிடத்தையும் பெற்றனர். போலோ ஆர் கோப்பைக்கான பந்தயத்தில் பொன்னி தாமஸ் முதலிடத்தையும் அங்கத்சிங் மதாரூ இரண்டாமிடத்தையும் அனிந்தித் ரெட்டி கொண்டா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
     தொடக்கம் முதல் தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்த அகில் ரபீந்திரா இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தில் இருந்த கிருஷ்ணராஜ் மகதிக் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai