சுடச்சுட

    

    குன்னத்தூரில் இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் முதலுதவி சிகிச்சை மையம்

    By  அன்னூர்,  |   Published on : 02nd June 2014 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் அருகே குன்னத்தூர் ஊராட்சியில் கோவை- சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள முதலுதவி சிகிச்சை மையம். இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடப்பதால், விபத்தில் சிக்கும் பலர் உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பின்றி உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது.
     ÷கோவை- சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கோவை நகரில் இருந்த பல தொழிற்சாலைகள் அன்னூர் வட்டாரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. மேலும் அன்னூர் வட்டாரப் பகுதிகளில் ஸ்பின்னிங் மில்கள் 150-க்கு மேல் உள்ளன.
     ÷இதையடுத்து, அன்னூர்- கோவை நெடுஞ்சாலையில் மருத்துவ உதவி மையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கென, கோவை மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, குன்னத்தூரில் கோவையைச் சேர்ந்த புனித ஜான் ஆம்புலன்ஸ் முதலுதவி பயிற்சி மையத்திற்கு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.
     ÷ஆம்புலன்ஸýடன் துவங்கப்பட்ட இந்த முதலுதவி மையத்தில், இப்பகுதிகளில் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சிறு விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.
     ÷இந்த முதலுதவி சிகிச்சை மையம் துவங்கப்பட்டு ஓராண்டு மட்டுமே செயல்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்மையம் மூடிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதிகளில் விபத்துகளில் சிக்குவோர் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
     ÷ஏற்கனவே அன்னூர்- கோவை ரோட்டில் கணேசபுரத்தில் இயங்கிவந்த தனியார் மருத்துவ உதவி மையம் மூடப்பட்டு விட்டது. இதனால் அன்னூரில் இருந்து கோவில்பாளையம் வரை 16 கி.மீ. தூரத்துக்கு அவசர சிகிச்சை பெற முதலுதவி மையமே இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
     ÷கோவை மாவட்ட நிர்வாகம் உடனே இந்த முதலுதவி சிகிச்சை மையத்தைத் திறந்து மீண்டும் செயல்படச் செய்ய வேண்டும். அல்லது அரசு, தனியார் மருத்துவமனைகளின் அவசர
     சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai