சுடச்சுட

    

    கோவையில் இந்த ஆண்டுமுதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
     ÷ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 23 வகையான பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்துகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் மட்டுமே தேர்வு மையங்கள் இருந்தன.
     தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளத்தின் பாலக்காடு, வயநாடு, திருச்சூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதுவரை மதுரை அல்லது சென்னையில் தான் முதல்நிலைத் தேர்வுகளை எழுதிவந்தனர். மேற்கண்ட பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இத்தேர்வுகளை எழுதி வந்தனர்.
     ÷கோவையில் மாநகராட்சி இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை நடத்துபவரும், கோவை அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியருமான கனகராஜ், கோவையில் தேர்வு மையத்தை அமைக்க வேண்டும் என்று கோரி வந்தார். இதற்காக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் மத்திய அமைச்சர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனு அனுப்பியிருந்தார்.
     இந்நிலையில், கடந்த புதன்கிழமை, கோவையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேராசிரியர் கனகராஜ் கூறியது:
     ÷கோவையில் தேர்வு மையம் அமைக்குமாறு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆண்டுமுதல் தேர்வு மையம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கோவை மையத்தில் இந்த ஆண்டுமுதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதலாம். கோவையைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai