சுடச்சுட

  

  கோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதை  திட்டத்தை நிறைவேற்ற மதிமுக கோரிக்கை

  By  கோவை,  |   Published on : 02nd June 2014 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் கோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றித் தருமாறு, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
   இதுதொடர்பாக மதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன், மத்திய ரயில்வே அமைச்சருக்கு சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:
   கோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நிறைவடையாததால், கோவையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
   ÷தவிர, தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்களையும் விவசாய உற்பத்திப் பொருள்களையும் விரைவாக குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்ல வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்குத் தேவையான முழு நிதியையும் ஒதுக்கி இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.
   தமிழகத்தில் இப்போது அமைக்கப்படும் போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டத்தில் 40 கி.மீ. தொலைவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே அமைக்கப்படுகிறது.
   ÷போத்தனூர்- பொள்ளாச்சி வழித்தடத்தில் தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் துவங்கப்பட்டுள்ளன. மாணவர்களும் தினமும் வேலைக்குச் செல்பவர்களும் ரயிலைப் பயன்படுத்தும் வகையில், ஏற்கெனவே ரயில் நிலையம் இருந்து மூடப்பட்ட கோவில்பாளையம், நல்லட்டிபாளையம், செட்டிபாளையம் ஆகிய இடங்களில் மீண்டும் ரயில் நிலையங்கள் அமைத்தால் ஏழை மக்களுக்குப் பயனிருக்கும் என்று கூறியுள்ளார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai