சுடச்சுட

  

  மதுக்கரை வட்டத்தில், எட்டிமடை பேரூராட்சிக்கு உள்பட்ட க.க.சாவடி, தாட்கோ காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம், மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளதால் வீணாகிறது.
   ÷கந்தே கவுண்டன் சாவடி, 8-ஆவது வார்டு, தாட்கோ காலனியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாத நிலையில், எட்டிமடை பேரூராட்சி சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
   ÷இப்பணி சுமார் 3 மாதங்களுக்கு முன் முடிவுற்ற நிலையில், தண்ணீர் வசதி மற்றும் மின்இணைப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
   ÷இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தினர் கூறியது:
   ÷நவீன சுகாதார வளாகம் முன்னரே திறக்கப்பட்டுவிட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இன்னமும் திறந்துவிடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் மூலமாக சுகாதார வளாகத்தின் அருகில் சமீபத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. விரைவில் மின்சார இணைப்பு மற்றும் மோட்டார் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி நிறைவடைந்தவுடன் நவீன சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படும் என்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai