சுடச்சுட

    

    கோவையில் பணத்துக்காக இளைஞரைக் கடத்திய 5 பேர் கும்பலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     ÷இதுகுறித்து போலீஸார் கூறியது:
     ÷கோவை, ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ்பாபு (29) என்பவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன் ரூ. 4.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சொன்னபடி திருப்பித் தரவில்லையாம்.
     ÷இதனால் கடந்த வெள்ளிக்கிழமை தினேஷ்பாபு உள்பட 4 பேர் மகேந்திரனைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, ரூ. 4.7 லட்சம் பணத்தைக் கொண்டுவந்து தருமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி பணத்தை திருப்பிக் கொடுத்த பிறகும் அவரை விடவில்லை.
     ÷இதனால் மகேந்திரன் உறவினர்கள் பீளமேடு போலீஸில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி, ஞாயிற்றுக்கிழமை மருதமலை அருகே வைத்து மகேந்திரனை மீட்டனர்.
     ÷மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த தினேஷ்பாபு, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (30), ரத்தினபுரியைச் சேர்ந்த ரகுநாதன் (25), திருநெல்வேலியைச் சேர்ந்த கணேஷ் (25), தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai