சுடச்சுட

    

    பணம், பதவி, புகழ் மூன்றும் தான்  இன்றைய சமுதாயத்தின் நோக்கமாக உள்ளன:  பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்

    By  கோவை,  |   Published on : 02nd June 2014 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் தான் இன்றைய சமுதாயத்தின் நோக்கமாக உள்ளது என்று, பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.
     ÷கோவை நன்னெறிக் கழகத்தின் நிறுவன நாள் விழா, ஞாயிற்றுக்கிழமை, கிக்கானி பள்ளி அரங்கில் நடைபெற்றது. நன்னெறிக் கழகத்தின் ஆலோசகர் என்.பார்த்தசாரதி வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன், இயாகோகா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     ÷பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியது:
     ÷நன்னெறிக் கழகம் போன்ற அமைப்புகளைத் தொடங்கி வைத்தவர்கள் அனைவருக்கும், தங்களுக்குப் பிறகு இதனை யார் வழிநடத்திச் செல்வார்கள் என்ற கவலை உள்ளது. அந்தக் கவலை வேண்டாம். அதை இறைவன் பார்த்துக் கொள்வார். நமது திட்டமும் இறைவனின் திட்டமும் ஒன்றாக இருக்கையில், அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது இறைவனது பொறுப்பு.
     ÷தற்போதுள்ள சமுதாயத்தைப் பார்த்தால் பயமாக உள்ளது. ஒருகாலத்தில் இப்படித் தான் வாழ வேண்டும் என்று பிடிவாதமாக வாழ்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் இப்போது அப்படியில்லை. பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் தான் இப்போதுள்ள சமுதாயத்தின் நோக்கமாக உள்ளது என்றார்.
     ÷தொடர்ந்து நன்னெறிக் கழகத்தின் நீண்டகால சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சுசி.சிவம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். நன்னெறிக் கழக நிர்வாகிகள், ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai