சுடச்சுட

    

    பாறு கழுகுகளைப் பாதுகாக்க  கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

    By  பெ.நா.பாளையம்  |   Published on : 02nd June 2014 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிராமசபைக் கூட்டங்களில் சுகாதாரத்திற்கு உதவி செய்யும் பாறு கழுகுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     ÷நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அரசுப் பார்வையாளராக சமூகநல அலுவலர் லட்சுமி, ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் நாகராஜ், குமாரசாமி, சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயலர் ஈஸ்வரி நன்றி கூறினார்.
     ÷சின்னத் தடாகத்தில் தலைவர் டி.என்.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் கார்த்தி நன்றி கூறினார்.
     ÷சோமையம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய மேற்பார்வையாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். செயலர் கோபி நன்றி கூறினார்.
     ÷குருடம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கார்த்திக், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் லீலா கிருஷ்ணன் நன்றி கூறினார்.
     ÷பன்னிமடை ஊராட்சியில் தலைவர் சரவணகுமார் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். செயலர் சண்முகராஜன் நன்றி கூறினார்.
     ÷இக்கூட்டங்களில், குடிநீர் விநியோகம், திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகளை மூடுதல், சீமைக் கருவேலம் மரங்களை அழித்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     ÷சுகாதாரத்திற்கு உதவி செய்யும் அரியவகைப் பறவையான பாறு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக, கால்நடைகளுக்குப் பயன்படுத்த தடை செய்யப்பட்ட மருந்தைத் தவிர்க்க வேண்டும் என்ற தீர்மானம் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai