சுடச்சுட

  

  கோவையில் போலீஸார் போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
   ÷இதுகுறித்து போலீஸார் கூறியது:
   ÷சேலம், ஜாகிர் நகரைச் சேர்ந்தவர் அவினாச்சாரி என்பவரது மனைவி ரத்தினம் (65). இவர் கோவை, பீளமேடு, பாலநகரில் வசித்துவரும் தனது மகள் வசந்தியைப் பார்க்க கோவை வந்திருந்தார்.
   ÷சனிக்கிழமை பகலில் ரத்தினம், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு, வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
   ÷அப்போது அங்கு வந்த 3 பேர் தங்களை போலீஸார் என்று அறிமுகம் செய்துகொண்டு, இப்பகுதியில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டு வருகிறீர்களே? நகைகளைக் கொடுங்கள், பத்திரமாக பேப்பரில் மடித்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
   ÷அதை நம்பி தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின், 4 பவுன் தங்க வளையல்களை ரத்தினம் கழற்றிக் கொடுத்துள்ளார். அவர்கள் பேப்பரில் மடித்துக் கொடுத்துள்ளனர்.
   ÷அதை வாங்கிச்சென்று வீட்டில் பிரித்துப் பார்த்தபோது, பேப்பரில் கல்லும் தகரமும் இருந்துள்ளன. இதுகுறித்து புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
   பேருந்தில் 36 கிராம் தங்கம் திருட்டு: பாலக்காடு, எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பன் மனைவி புஷ்பவல்லி. இவர் சனிக்கிழமை கோவை வந்தார். உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் செல்ல பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவரது கைப்பயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதில் 36 கிராம் அளவுள்ள தங்க நகைகள் இருந்துள்ளன. ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai