சுடச்சுட

  

  மூலத்துறை ஸ்ரீ சங்கரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

  By  மேட்டுப்பாளையம்,  |   Published on : 02nd June 2014 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுமுகை அருகே மூலத்துறை கிராமத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தேவாங்கர் சமூக மக்களின் குலதெய்வமான ஸ்ரீ சங்கரேஸ்வர சுவாமி திருக்கோவிலின் 4-வது கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   ÷இதற்கான விழா நிகழ்ச்சிகள் கடந்த மே 30-ம் தேதி, பவானி நதியிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்கின. தொடர்ந்து, திருவிளக்கேற்றி அனைத்துவித வழிபாடுகளும், முதற்கால வேள்வியும், 108 மூலிகை பொருட்களைக் கொண்டு மங்கள ஆராதனையும் நடைபெற்றன.
   ÷சனிக்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து, விமான கலசம் நிறுவுதலும், இரண்டாம் கால வேள்வியும், திருச்சுற்றுத் தெய்வங்களை பீடத்தில் நிறுவும் அஷ்டபந்தன நிகழ்ச்சியும், மாலை மூன்றாம் கால வேள்வியும் நடைபெற்றன.
   ÷இதையடுத்து, ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இறைவனுக்கு காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. தொடர்ந்து நான்காம் கால வேள்வியுடன் மகா வழிபாடும், திருக்குடங்கள் திருக்கோவிலை வலம் வருதலும் நடைபெற்றன.
   ÷பின்னர் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், உதகை தட்சிணாமூர்த்தி திருமடம் மருதாசல அடிகள், சிதம்பரம் மெüனமடம் மெüன சுந்தரமூர்த்தி அடிகள் ஆகியோர் தலைமையில், திருக்கோவில் விமான கோபுரம், மூலவர் மற்றும் கோவில் திருச்சுற்றுத் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
   ÷தமிழ்த் திருமுறைப்படி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் நடத்தினர். இவ்விழாவில் கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் சம்பத்குமார், செயலர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சங்கரேஸ்வரன், கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கராஜ், மனோகரன், ஜெகநாதன், சங்கர் உள்பட தேவாங்க சமூக மக்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை கங்காதர தேசிகர், சேலம் சந்திரசேகர ஓதுவார், சிரவை ஆதீனம் ஜெகநாத ஓதுவார், பாலமுருகன் ஓதுவார் ஆகியோரால் அருளாசி வழங்கப்பட்டது. இறுதியில் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai