சுடச்சுட

    

    கடந்த மூன்று தினங்களாக வால்பாறையில் நடைபெற்ற கோடைவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
     ÷வால்பாறையில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கியது. இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க்காட்சியும் காய்கறிக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தன. வனத்துறை, தேயிலைத் தோட்டக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
     ÷விழா மேடையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை திரளான சுற்றுலாப் பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள், வால்பாறை வட்டார மக்கள் கண்டு களித்தனர். கோடைவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்றது. ÷
     ÷சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் தலைமை வகித்தார். கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.அமீது, நகராட்சி துணைத் தலைவர் மா.மயில்கணேசன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பொள்ளாச்சி சார்ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே வரவேற்றார்.
     ÷விழாவில், தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை உத்தரவு, மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக்கால், செயற்கைக்கரம் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் வழங்கினார்.
     ÷அவர் பேசுகையில், ""வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் யாத்ரி நிவாஸ், ஒருங்கிணைந்த சுற்றுலா தங்கும் விடுதிகள் விரைவில் திறக்கப்படும்'' என்றார்.
     ÷விழாவில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி விகிதம் அதிகரித்த பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
     ÷இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் (பொறுப்பு), வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகன் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai