சுடச்சுட

  

  வெள்ளியங்கிரி மலையில்  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

  By  கோவை,  |   Published on : 02nd June 2014 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈஷா பசுமைக்கரங்கள் மற்றும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் வெள்ளியங்கிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
   ÷தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோகா மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா பசுமைக் கரங்கள் மற்றும் சலீம் பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில், வெள்ளியங்கிரி மலையில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   ÷இப்பணியில் 200-க்கு மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், கல்லூரி மாணவர்களும், மக்களும் ஈடுபட்டனர். ÷இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் சலீம் பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பிரமோத், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் ஜீவானந்தம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவர் சதானந்தம், தமிழக வனத்துறை வனவர் மணிகண்டன், ஈஷா பசுமைக் கரங்களின் திட்ட இயக்குனர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
   ÷இதைத் தொடர்ந்து, கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் ஏ. பி.நாகராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற நிறைவுவிழாவில் மக்களுக்கு மரக்கன்றுகளை அவர் வழங்கினார்.
   ÷இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் லதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் டீன் மகிமைராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஈஷா இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai