Enable Javscript for better performance
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் விவரத்தை வெளியிட நடவடிக்கை கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் விவரத்தை வெளியிட நடவடிக்கை கோரி மனு

    By dn  |   Published on : 03rd June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில், சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் ஜே.டி.சாக்ரடீஸ் அளித்த மனு விவரம்:பிளஸ் 2 பொதுத் தேர்வு வெளிவந்த நிலையில், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அங்கீகாரம் பெறாத போலி கல்லூரிகளும், கல்வி நிலையங்களும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களைவிட கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வருகின்றன.

    கற்றறிந்த விவரம் புரிந்த பெற்றோர்களும், மாணவர்களும் மோசடி கல்லூரிகளின் வலையில் சிக்கி ஏமாற்றப்பட்டிருக்கும்போது கல்வி அறிவு இல்லாத பெற்றோர்களையும், முதல் தலைமுறையாக கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவிகளையும் ஏமாற்றுவது போலி கல்வி நிறுவனங்களுக்கு கடினமான விஷயம் கிடையாது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங், பிசியோதெரபி, பாலிடெக்னிக், பி.எட்., பார்மசி கல்லூரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிலையங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் பட்டியலை உடனடியாக வெளியிட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் போலி கல்வி நிறுவனங்களால் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai