சுடச்சுட

    

    காரமடை ஒன்றியம் மற்றும் நகர அதிமுக சார்பில் அதிமுக அரசின் மூன்றாமாண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    காரமடை கார் நிறுத்த மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றிய கழக செயலர் பி.டி. கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஓ.கே. சின்னராஜ், சேலஞ்சர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரமடை பேரூராட்சி தலைவர் டி.டி. ஆறுமுகசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பாளராக பங்கேற்றார். அவர் பேசியது:

    மக்களவைத் தேர்தலில் அதிமுகவை 37 இடங்களில் வெற்றி பெறச் செய்த தமிழக முதல்வருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் மக்கள் நலத்திட்டங்கள் தமிழக மக்களை சென்றடைந்ததற்கு அடையாளமாகவே வாக்காளர்கள் இந்த வெற்றியை தந்துள்ளனர்.

    முதல்வரின் சீரிய நடவடிக்கையால் மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், காரமடை ஒன்றியக் குழு தலைவர் ராஜ்குமார், துணைத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு ஒக்கலிக மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் ஜோதிமணி, மாவட்ட பேரவை செயலர் பிஆர்ஜி. அருண்குமார், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai