சுடச்சுட

    

    அம்மா உணவகம் தொடங்கி ஓராண்டு நிறைவு: இனிப்பு வழங்கிய அமைச்சர்

    By dn  |   Published on : 03rd June 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சியில், தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு குனியமுத்தூரில் உள்ள அம்மா உணவகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திங்கள்கிழமை இனிப்பு வழங்கினார்.

    ஓராண்டு நிறைவையொட்டி வழக்கமான உணவுடன் கூடுதலாக இனிப்பு வழங்கினார் அமைச்சர். மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் மதிய உணவுடன் இனிப்பு வழங்கப்பட்டது.

    அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 45 லட்சத்து 8 ஆயிரத்து 206 இட்லியும், 10 லட்சத்து 22 ஆயிரத்து 163 சாம்பார் சாதமும், 7 லட்சத்து 62 ஆயிரத்து 28 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    ஏழை மக்களுக்கு ரூ.1 வீதம் இட்லியும், ரூ.5 வீதம் சாம்பார் சாதமும், ரூ.3 வீதம் தயிர் சாதமும் வழங்கப்பட்டுள்ளது.மாநகர மேயர் (பொறுப்பு) சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, தெற்கு மண்டலத் தலைவர் பெருமாள்சாமி, நிலைக்குழுத் தலைவர்கள் சாந்தாமணி, செந்தில்குமார், உதவி ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai