சுடச்சுட

  

  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, பாடப் புத்தகங்கள்

  By dn  |   Published on : 03rd June 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி துவங்கிய முதல் நாளான திங்கள்கிழமை இலவச சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

  அரசுப் பள்ளிகள் அனைத்தும் வரும் 4ஆம் தேதி திறக்கப்படும் என்ற வதந்தி ஞாயிற்றுக்கிழமை பரவியதால், பெரும்பாலான மாணவர்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

  இந்த நிலையில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, அரசின் இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை பள்ளி தலைமை ஆசிரியா ப.ராபின்சன் திங்கள்கிழமை வழங்கினார்.

  இதே போல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai