சுடச்சுட

    

    உன்னதி அறக்கட்டளையின் இலவச தொழிற்கல்வி பயிற்சி நிறைவு

    By dn  |   Published on : 03rd June 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உன்னதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 6-வது இலவச தொழிற்கல்வி பயிற்சி முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

    கோவை கவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் உன்னதி அறக்கட்டளை சார்பில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி, அடிப்படை ஆங்கில பயிற்சி, கணினி பயிற்சி, வாழ்க்கைத் திறன் பயிற்சி ஆகியவை 70 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அதாவது 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மாணவர்கள் 18 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்கும் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு நிரந்தர வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

    இதற்காக உன்னதி அறக்கட்டளை பல்வேறு முன்னணி நிறுவனங்களுடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சியும் அளிக்கப்படுகிறது.சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய 6-வது தொழிற்கல்வி பயிற்சி வகுப்பில் சுமார் 17 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியின் நிறைவு விழாவில் கங்கா மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் கிருஷ்ணாநந்தா கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ஜூன் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள 7-வது பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் கவுண்டம்பாளையம், பாலாஜி நகரில், பி அண்டு டி காலனியில் இயங்கி வரும் அறக்கட்டளை அலுவலகம், 0422-2403822, 8903126708, 9894478219 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai