சுடச்சுட

    

    "சிறுவாணி அணையில் குடிநீர் குழாய் அடைப்பு பிரச்னையில் அரசு தீர்வு காண வேண்டும்'

    By dn  |   Published on : 03rd June 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுவாணி அணையில் குடிநீர் குழாய் வால்வு அடைப்பு பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ தினகரன் மனு அளித்துள்ளார்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் தேமுதிக எம்எல்ஏ தினகரன் அளித்த மனு விவரம்:

    கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. சிறுவாணி குடிநீரை தடுத்திடும் வகையில் கேரள அரசின் நீர் பாசனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சிறுவாணி அணையில் முகாமிட்டு 4 வது வால்வுக்கு கீழ் உள்ள குடிநீர் குழாய் வால்வை அடைத்து வருகின்றனர்.

    எனவே, மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னையை எடுத்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கேரள அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai