சுடச்சுட

  

  ஜூன் 2: சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 9 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

  இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நிலக்கடலை 1000 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 4,000 முதல் ரூ. 4,400 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை, ரூ. 3,600 முதல் ரூ. 3,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 3,300 முதல் ரூ. 3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

  திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 9 வியாபாரிகளும், மலையப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசுவலையபாளையம், புளியம்பட்டி, சேவூர், நம்பியூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 விவசாயிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

  சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அழகிரி சாந்தலிங்கம் (பொறுப்பு) கூறுகையில், சென்ற

  வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 130 வரை விலை அதிகரித்திருந்தது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai