சுடச்சுட

  

  அவிநாசி அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி மையம் திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

  தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அவிநாசி பகுதியில் முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரியகாட்டுப்பாளையம், தெக்கலூர் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையம் துவங்க உத்தரவு விடுத்திருந்தது.

  இதன்படி, முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரியகாட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மையத் துவக்க விழாவிற்கு, அவிநாசி ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன் தலைமை வகித்தார்.

  ஊராட்சித் தலைவர் அமுதா செல்வராஜ், துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரா.ஆண்டாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அங்கன்வாடி மையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி துவக்கி வைத்தார்(படம்)

  இதையொட்டி, 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சேவூர் பகுதி மேற்பார்வையாளர் கண்ணம்மாள் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai