சுடச்சுட

    

    மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் வழங்கும் பணி தொடக்கம்

    By dn  |   Published on : 03rd June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும், விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்களை பள்ளி தொடங்கும் நாளிலேயே வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    கோவை மாவட்டத்தில் உள்ள 872 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 88,150 மாணவ, மாணவிகளுக்கும், 269 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 9,565 மாணவ, மாணவிகளுக்கும், 255 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 60,485 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

    இதில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 18,575 புத்தகங்களும், 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 17,304 புத்தகங்களும், 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 17,304 புத்தகங்களும், 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 17,817 புத்தகங்களும், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 18,505 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    அதேபோல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 70,925 புத்தகங்களும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 65,455 புத்தகங்களும், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 54,280 புத்தகங்களும், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 94,340 புத்தகங்களும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 1 லட்சத்து 56,686 புத்தகங்களும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 2 லட்சத்து 18,933 புத்தகங்களும் என மொத்தம் 6 லட்சத்து 6,619 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

    மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் நாளில் சுமார் 3296 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கோவையில் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, மண்டலக் குழுத் தலைவர் பெருமாள்சாமி, மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் சாந்தாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai