சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, புதன்கிழமை (ஜூன் 4) தொடங்குகிறது.

    இது குறித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: மேட்டுப்பாளையம் வட்டத்தில் 1423-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் புதன்கிழமை தொடங்குகிறது. கோவை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை வட்டாட்சியர் சண்முகராஜ் தலைமையேற்று தினமும் காலை 10 மணிமுதல் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடத்தி வைக்கிறார். புதன்கிழமை நடைபெறும் ஜமாபந்தியில் காரமடை உள் வட்டத்திற்குட்பட்ட கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மக்களும், வியாழக்கிழமை நடைபெறும் ஜமாபந்தியில் மருதூர், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சி பகுதி மக்களும் மனுக்களை வழங்கலாம்.

    ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் ஜமாபந்தியில் மேட்டுப்பாளையம் உள் வட்டத்திற்குள்பட்ட நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை, ஜடையம்பாளையம் ஊராட்சி பகுதி மக்களும், ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் ஜமாபந்தியில் இரும்பறை, சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இலுப்பநத்தம், பள்ளேபாளையம் ஊராட்சி பகுதி மக்களும் மனுக்களை வழங்கலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai