சுடச்சுட

  

  கோவை அருகே போலி ஆவணங்கள் மூலமாக பிறருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் பெண் தரகரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

  கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகள் அமுதா மீனாட்சி (33). இருவரும் அதே பகுதியில் மீனாட்சி ஷெல்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளர் சங்கரநாராயணன் (60) உள்ளிட்டோரிடம் ரூ.25 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, துடியலூர், குருடம்பாளையம் பகுதியில் வேறொருவருக்குச் சொந்தமான 9.5 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாக அமுதா மீனாட்சி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

  இது தொடர்பாக மகாதேவனைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தற்போது அமுதா மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் மோசடி செய்யப்பட்ட பலரும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது ரூ.2 கோடி வரை மோசடி புகார் அளித்துள்ளனர்.

  இதற்கிடையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதா மீனாட்சி சார்பில் ஜாமீன் கோரி, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திங்கள்கிழமை அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது தந்தையின் ஜாமீன் மனு விசாரணை முடிவைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி, விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai