சுடச்சுட

    

    வால்பாறையில் தாவரவியல் பூங்கா: வணிகர் சங்கம் கோரிக்கை

    By dn  |   Published on : 03rd June 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறையில் தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வால்பாறைக்கு வந்த சுற்றுலாத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணனிடம் வணிகர் சங்கத் தலைவர் பி.சுதீர் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பது:

    வால்பாறை பகுதிக்கு சமீபகாலமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப் பகுதியில் பூங்கா, படகு இல்லம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.

    வால்பாறை வாழைத்தோட்டம் நகர் பின்புறத்தில் சுமார் 55 ஏக்கர் நிலம் பூங்கா அமைக்க ஏற்ற இடமாக உள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் மரங்களை அழிக்காமலேயே பூங்கா அமைத்தால், ரசிக்கத்தக்க

    வகையில் அமையும். எனவே தமிழக அரசின்

    தோட்டக்கலை துறை சார்பாக அந்த இடத்தில் தாவரவியல் பூங்கா அமைத்து வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai