Enable Javscript for better performance
ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம், நடூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மாவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

    திருவிழா நிகழ்ச்சிகள் மே 25-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கின. தொடர் ந்து, பொரிச்சாட்டுடன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாரை தப்பட்டை முழங்க, பவானி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    திங்கள்கிழமை அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் முனியப்பன் கோயில்

    வீதி, அன்னூர் சாலை உள்பட நடூர் பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் பங்கேற்று, மாவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வணங்கினர்.

    தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை காளை மாட்டு பூஜையும், புதன்கிழமை இரவு அம்மன் ஊர்வலமும், வியாழக்கிழமை மஞ்சல் நீராடுதலும், வெள்ளிக்கிழமை மறுபூஜையுடன், அன்னதானமும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai