ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி திறப்பு
By dn | Published on : 03rd June 2014 04:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அன்னூர் அருகே காளியாபுரத்தில் ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.) திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஓ.ஆறுமுகசாமி தலைமை தாங்கி, பள்ளியை திறந்து வைத்தார்.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், லஷ்மி விலாஸ் வங்கியின் பொது மேலாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கலைவாணி பொறியியல் கல்லூரி தாளாளர் சி.கே.சுந்தரம், சங்கீத் நிறுவனங்களின் இயக்குநர் சதீஷ்குமார், ஓய்வு பெற்ற மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வேலுசாமி, ஓய்வு பெற்ற சி.பி.ஐ, துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி, பள்ளி இயக்குநர் துளசியம்மாள், பள்ளி முதல்வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.