சுடச்சுட

  

  கோவையில் தாயும், இரு குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

  கோவை கணபதி அருகே உள்ள ராமகிருஷ்ணா நகர் ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம். இவரது மனைவி வத்சலாதேவி (28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய குழந்தைகள் மகிலன் (6), பிரனீத் (11 மாதம்).

  ஞாயிற்றுக்கிழமை இரவு வத்சலாதேவி, மகிலன், பிரனீத் ஆகிய மூவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

  இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  மாநகரக் காவல் உதவி ஆணையர்கள் பாஸ்கர், ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜோதி, சாலைராம் சக்திவேல் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

  கொலை தொடர்பாக மருதமாணிக்கத்திடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இருப்பினும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

  இந்நிலையில் அவர்

  களது வீட்டுக்கு அருகேயுள்ள வீடுகளில் வசித்த இரு குடும்பத்தினர் சில நாள்களுக்கு முன் வீட்டைக் காலி செய்து சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் கடைசியாக வீட்டைக் காலி செய்து சென்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆண்டிமுத்து மகன் செந்தில்குமார் (32) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை போலீஸார் தேடிய போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது.தொடர் விசாரணை நடத்தியதில், அவர் மானாமதுரையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீஸார், அவரைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வத்சலாதேவியையும், அவரது குழந்தைகளையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

  இது குறித்து போலீஸார் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரின் குடும்பம் கோவை வந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் ரங்கநாதர் வீதியில் உள்ள தனது நண்பரைப் பார்க்க செந்தில்குமார் சென்றபோது வத்சலாதேவியைப் பார்த்துள்ளார். அதற்குப் பிறகு அவருடன் பேச வேண்டும் என்பதற்காக அடிக்கடி அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார்.

  இதற்கிடையில் லீலாவதி என்பவருடன் செந்தில்குமாருக்கு சில நாள்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. பின்னர், வத்சலாதேவி தங்கியிருந்த குடியிருப்பில் காலியாக உள்ள வீட்டுக்கு செந்தில்குமார் வாடகைக்கு சென்றுள்ளார். அங்கு அடிக்கடி வத்சலாதேவியுடன் அவர் பேச முற்பட்டதால், பிரச்னைகள் ஏற்பட்டதில் செந்தில்குமாரைப் பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார் லீலாவதி.

  இதற்கிடையில் தனியாக இருந்ததால் வீட்டைக் காலி செய்யுமாறு செந்தில்குமாரிடம் வற்புறுத்தியுள்ளார் மருதமாணிக்கம். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் வீட்டைக் காலி செய்து, அதே பகுதிக்கு அருகே தனது பெற்றோருடன் தங்கியுள்ளார் செந்தில்குமார்.

  ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்திவிட்டு வத்சலாதேவியின் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது வத்சலாதேவி சத்தம் போட்டதால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்த கத்தியால் வத்சலாதேவியைக் குத்த முயன்றபோது, கத்தி அவரது இடுப்பில் இருந்த குழந்தை பிரனீத்தின் கழுத்தை அறுத்தது. அதைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற வத்சலாதேவி, மகிலன் ஆகியோரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து செந்தில்குமார் தப்பியுள்ளார் என்றனர்.

  இது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai