Enable Javscript for better performance
அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    திங்கள்கிழமை மாலையில் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு நகர வங்கித் தலைவரும், அதிமுக தொகுதி செயலாளருமான வி.அமீது தலைமையில் நகர செயலாளர் மயில்கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுóள்ள ஊதியம், சலுகைகள் மற்றும் இந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. வார்டு உறுப்பினர் தன்ராஜ், நெல்லை செல்வன், பேரவை நரசப்பன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai