சுடச்சுட

    

    கோவை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பேரூர் வட்டத்தில் முதன்முறையாக ஜமாபந்தி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் புதன்கிழமை முதல் நடைபெற உள்ளது.

     பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ்கண்ட நாட்களில் காலை 10 மணியிலிருந்து ஜமாபந்தி நடைபெற உள்ளது.

     ஆலாந்துறை உள்வட்டம், ஜூன் 4 (புதன்கிழமை): இக்கரை போளுவாம்பட்டி, செம்மேடு, மத்துவராயபுரம், ஆலாந்துறை, பூலுவபட்டி கிராமங்கள்.

     மாதம்பட்டி உள்வட்டம், ஜூன் 5 (வியாழக்கிழமை): தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் கிராமங்கள்.

     தொண்டாமுத்தூர் உள்வட்டம், ஜூன் 10 (செவ்வாய்க்கிழமை): தொண்டாமுத்தூர், தேவராயபுரம், தென்னமநல்லூர், வெள்ளிமலைப்பட்டிணம்,ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம்.

     வடவள்ளி உள்வட்டம், ஜூன் 11 (புதன்கிழமை): வடவள்ளி, கலிக்கநாயக்கன்பாளையம், சித்திரைச் சாவடி (கிழக்கு, மேற்கு) கிராமங்கள்.

     பேரூர் உள்வட்டம், ஜூன் 12 (வியாழக்கிழமை): வேடபட்டி, பேரூர், சுண்டக்காமுத்தூர், வீரகேரளம் கிராமங்கள்.

     குனியமுத்தூர் உள்வட்டம், ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை): குமாரபாளையம், குனியமுத்தூர் வருவாய்க் கிராம பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தியில் அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai