சுடச்சுட

    

    ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சிஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

    Published on : 04th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

     வடவள்ளி அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இங்கு காவலாளி இல்லை. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏ.டி.எம். மையத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து கண்காணிப்புக் கேமராவை உடைத்துள்ளனர். மேலும், இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

     செவ்வாய்க்கிழமை காலையில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர், இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக ஏ.டி.எம்.க்குள் நுழைந்து பணம் கொள்ளையடிப்பது மற்றும் காவலாளிகளை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

     இதையடுத்து, ஏ.டி.எம். கொள்ளைச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க வங்கிகளுக்கு காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ஏ.டி.எம். மையத்தில் வங்கி நிர்வாகம் காவலாளியை நியமிக்கவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai