சுடச்சுட

  

  கூப்பர் கார்ப்பரேஷனின் புதிய ஜெனரேட்டர்கள் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  இதுதொடர்பாக கூப்பர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் மனிஷா கூப்பர் செய்தியாளர்களிடம் கூறியது: கூப்பர் கார்ப்பரேஷன் நிறுவனம் தொழிலகங்களுக்கான என்ஜின்களை உற்பத்தி செய்து வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட என்ஜினை அறிமுகம் செய்கிறது.

  "கூப்பர் எக்கோ பேக்' என்ற பெயரில் அறிமுகமாகும், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு தரச் சான்று கொண்ட, 10 கேவிஏ முதல் 200 கேவிஏ மின்னுற்பத்திக்கான ஜெனரேட்டர்களை கூப்பர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டன.

  கூப்பர் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 64 விற்பனை மற்றும் சேவை மையங்கள் உள்ளன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் மேலும் 35 மையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1.5 லட்சம் ஜெனரேட்டர்கள் விற்பனையாகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 25 சதவீதம் வரை ஜெனரேட்டர் விற்பனை வளர்ச்சி உள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai