சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சர்வதேச அளவிலான ரோலர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

     நேபாள நாட்டின் ரோலர்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் எவரெஸ்ட் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், தலைநகர் காத்மாண்டில் கடந்த மாதம் நடைபெற்றன. இதில், ஜி.கே.டி. பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் டி.தாரிகா, எஸ்.சங்கமித்ரா ஆகியோர் இரண்டாம் ரிங் நிலைப் போட்டிகளில் முதலிடத்தையும், இரண்டாம் ரிங் நிலை-ஏ போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். கடந்த ஏப்ரல் 25-இல் சாய் குவாங் டு பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய தற்காப்புக் கலைத்திறன் போட்டிகள், சண்டீகரில் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 17 வயதினருக்கான பிரிவில்

    இப் பள்ளியைச் சேர்ந்த பி.ஹரிஹரன் பங்கேற்று சிறப்பான முறையில் திறன்களை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றார்.

     இம் மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ஆர்.ராஜேந்திரன், முதல்வர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், உடற் கல்வி இயக்குநர் அருள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai