Enable Javscript for better performance
தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி: 53 கிலோ பிரிவில் வினோத்ராஜ் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி: 53 கிலோ பிரிவில் வினோத்ராஜ் முதலிடம்

    Published on : 04th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெற்று வரும் தேசிய சப்-ஜூனியர் வலு தூக்கும் போட்டியின் 53 கிலோ எடைப் பிரிவில், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த இ.வினோத்ராஜ் முதலிடம் பெற்றார்.

     கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில், தமிழ்நாடு வலு தூக்கும் சங்கத்தின் ஆதரவுடன் கோவையில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை இதன் துவக்க விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

     53 கிலோ எடைப் பிரிவில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கே.வினோத்ராஜ் முதலிடமும், தமிழகத்தின் ஏ.பத்மநாபன் இரண்டாமிடமும், கேரளத்தின் எம்.எஸ்.அக்ஷய்குமார் மூன்றாமிடமும் பெற்றனர். 59 கிலோ எடைப் பிரிவில் ஒடிசாவின் பித்யாதர் சிங் முதலிடமும், தெலங்கானாவின் ஜி.ரமேஷ் இரண்டாமிடமும், உத்தரப்பிரதேசத்தின் அர்ஜூன் சிங் கோலி மூன்றாமிடமும் பெற்றனர்.

     இப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 28 மாநிலங்களைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai